தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
WWF எனப்படும் (World Wildlife Fund for Nature) வனவிலங்குகளை இயற்கையாக பாதுகாப்பதற்கான சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் 2009ம் ஆண்டு முதல் 29 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. வனவிலங்குகளை செல்லப் பிராணிகளாகவோ, கூண்டில் அடைத்தோ, சர்க்கஸ் போன்றவற்றில் பயன்படுத்தியோ கொடுமைப்படுத்தாமல் அதனதன் இயற்கை வழி வாழ்க்கையை அனுமதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இநத அமைப்பின் இந்திய பிராந்திய விளம்பர தூதராக ஸ்ருதிஹாசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிறுவனம் உலக அளவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்படுவதற்கு ஏற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த பணிகளை ஸ்ருதிஹாசன் இந்தியாவில் செய்ய இருக்கிறார்.