அண்ணாத்த படம் ஏமாற்றம் அளித்தது : குஷ்பு வருத்தம் | தெலுங்கில் ரீமேக்காகும் சின்னமருகள் தொடர் | எதிர்நீச்சல் 2வில் கோலங்கள் ஆதி என்ட்ரியா? | காதலை அறிவித்த சங்கீதா - அரவிந்த் சேஜு | அப்பா ஆகப்போகும் அவினாஷ் | வெப்சீரிஸில் கமிட்டான ஆயிஷா - புவியரசு | வெள்ளித்திரையில் நுழையும் மகா நடிகை போட்டியாளர் | பொங்கல் போட்டியில் இணைந்த 'மத கஜ ராஜா' : 12 ஆண்டுகளுக்கு பின் விமோசனம் | திரு மாணிக்கம் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் | அப்பாவுடன் மோதும் அதிதி ஷங்கர்! |
காட்பாதர் படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்திற்கு 'வால்டர் வீரய்யா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது சிரஞ்சீவியின் 154வது படம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே எஸ் ரவீந்திரா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ரவிதேஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கோனா வெங்கட் மற்றும் கே.சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரைக்கதையை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லுரி எழுதியுள்ளனர். அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.