'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமா உலகமும், தெலுங்கு சினிமா உலகமும் பல வருட இடைவெளிக்குப் பிறகு ஒன்றுக்கொன்று நெருங்கி வர ஆரம்பித்துள்ளன. 30 வருடங்களுக்கு முன்பு தெலுங்குத் திரைப்பட உலகம் சென்னையில்தான் இயங்கி வந்தது. பல முன்னணி தெலுங்கு நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் அனைவருக்கும் சென்னையில் வீடுகள் இருந்தது. இப்போதும் ஒரு சிலர் அவற்றை விற்காமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான என்.டி.ராமராவ் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வரான பிறகு தெலுங்குத் திரையுலகத்தை அப்போதைய ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்திற்குக் கொண்டு சென்றார். அதற்காக பல சலுகைகளை அறிவித்தார். பின்னர் அங்கு பல ஸ்டுடியோக்கள் உருவாகி தெலுங்கு சினிமா உலகம் முற்றிலுமாக ஐதராபாத்திற்கே மாறியது. இப்போது பெரும்பாலான தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தான் நடந்து வருகிறது.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகியும், தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆகியும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது சில தெலுங்குத் தயாரிப்பாளர்கள் நேரடியாக தமிழ்ப் படங்களைத் தயாரிக்கவும், சில தெலுங்கு இயக்குனர்கள் தமிழ்ப் படங்களை இயக்கவும் ஆரம்பித்துள்ளார்கள்.
விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தைத் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க, தெலுங்குத் தயாரிப்பாளர் தயாரிக்கிறார். தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க, தெலுங்குத் தயாரிப்பாளர் தயாரிக்கிறார். மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளன.
அவற்றிற்கு முன்பாக சிவகார்த்திகேயன் நடிக்க தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கியுள்ள 'ப்ரின்ஸ்' படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வரவேற்பு விஜய், தனுஷை வைத்து படங்களை இயக்கியுள்ள வம்சி, வெங்கி ஆகியோருக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும். அதற்கு முன்னோட்டமாக 'ப்ரின்ஸ்' படம் மூலம் அனுதீப் வெற்றியைப் பறிப்பாரா என்று தெலுங்குத் திரையுலகத்தினரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.