மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. அவர் இயக்கிய படங்களில் 'சென்னை 28, மங்காத்தா, மாநாடு' பெரிய வெற்றி பெற்ற படங்கள். தற்போது தெலுங்கு, தமிழில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ்' படம் நாளை(அக்.,21) தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. அதற்காக நேற்று டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வீடியோ மூலம் உடனுக்குடன் பதிலளித்தார் சிவகார்த்திகேயன்.
அப்போது இயக்குனர் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயனிடம், “புரோ, நாம எப்போ ஷுட்டிங் போலாம், அப்புறம் நம்ம அனுதீப் உங்களை ஏதாவது டார்ச்சர் பண்ணாரா,” எனக் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சிவகார்த்திகேயன், “ஷுட்டிங் எப்ப வேணாலும் போலாம் சார். அந்த கதை எப்ப சார் கேக்கலாம்…அதே மாதிரி இன்னொரு கேள்வி எனக்கு இருக்கு சார். நான் உங்ககிட்ட கேக்கறேன். அந்தப் படத்துல பிரேம்ஜி பிரதரோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன், அதைத் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன் சார்,” என பதிலளித்தார்.
சிவகார்த்திகேயனின் கேள்விக்கு, ''கதையா” என்று ஒரு வார்த்தையில் மட்டும் பதிலளித்து வடிவேலுவின் குட்டி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு இதுவரையிலும் தன்னுடைய படங்களில் கதை என்பது இருந்ததே இல்லை என்று எப்போதுமே ஜாலியாகப் பேசுவார். ஆனால், 'மாநாடு' கதைக்கும், திரைக்கதைக்கும் அவருக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.