''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு முதல்முறையாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்து இளம் நடிகர் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு நடைபெறும் பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் படக்குழுவினருடன் பிரச்சனை செய்ததுடன், படத்திற்காக போடப்பட்டிருந்த செட்டையும் அடித்து நொறுக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் உள்ள மேலக்கோட் பகுதியில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கே உள்ள கிராமம் ஒன்றில் மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டு அங்கே காட்சிகள் படமாக்கப்பட்டன. அதேசமயம் இந்த படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே அங்குள்ள மக்கள் வழிபடும் ராய கோபுர கோவில் ஒன்று உள்ளது. உள்ளூர் மட்டுமல்லாது வெளியூரில் இருந்தும் இந்த கோவிலுக்கு தினசரி பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதேசமயம் அப்படி அவர்கள் வந்து செல்லும் வழியில் படப்பிடிப்பிற்காக போடப்பட்ட மதுபான பார் செட் மற்றும் அதில் படமாக்கப்பட்ட காட்சிகள் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஒரு கட்டத்தில் அப்படி போடப்பட்டிருந்த அந்த செட்டையும் உடைத்து நொறுக்கி உள்ளனர் என்று சொல்லப்படுகிறது..
அந்த பகுதியில் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முறைப்படி அனுமதி வாங்கி இருந்தாலும் அதையும் தாண்டி படப்பிடிப்பு நீடித்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல கோவில் அருகில் இப்படி ஒரு காட்சியை படம் பார்க்கப் போகிறோம் என்பது பற்றியும் படக்குழுவினர் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த களேபரங்கள் நடந்த சமயத்தில் படத்தின் ஹீரோ நாகசைதன்யா செட்டில் தான் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம் படக்குழுவினர் தரப்பில் இருந்து இது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.