மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் |
மலையாளத்தில் நகைச்சுவை நையாண்டி கலந்த படங்களை எடுப்பதற்கு பெயர் பெற்ற இயக்குனர் நாதிர்ஷா. தற்போது நடிகர் ஜெயசூர்யாவை வைத்து இவர் இயக்கியுள்ள படம் ஈஷோ. இந்த படத்திற்கு அதன் டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே கேரள மாநில முன்னாள் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் என்பவர் இது கிறிஸ்துவ மதத்தை பற்றி தவறான கருத்துக்களை சொல்லும் படம் என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்தப்படத்தின் டேக்லைனாக 'நாட் பிரம் பைபிள்' என்கிற வார்த்தை சேர்க்கப்பட்டிருந்தது தான் அவரது எதிர்ப்புக்கு காரணம்.
அப்போது அவருக்கு பதில் அளிக்கும் விதமாக படம் வெளியான பிறகு அதை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என இயக்குனர் நாதிர்ஷா கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இந்த படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது படத்தை பார்த்த பி.சி.சார்ஜ் தனது கருத்தில் இருந்து பின்வாங்கி, “இந்த படம் நான் எதிர்ப்பு குரல் கொடுத்தது போன்று எந்தவித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்கவில்லை. சொல்லப்போனால் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் சென்று சேரவேண்டிய ஒன்று. அதனால் இளைஞர்கள் மற்றும் குடும்பத்துடன் இந்த படத்தை கட்டாயமாக பாருங்கள்” என்று படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.