'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா |
த்ரிஷ்யம் இரண்டு பாகங்கள் மற்றும் டுவல்த் மென் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து மோகன்லால் தற்போது நான்காவது முறையாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா முதல் அலைக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது லண்டனில் இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் தாங்கள் தங்கி இருந்த இடத்தில் சக நடிகர்களான பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித் மற்றும் நடிகை சம்யுக்தா மேனன் ஆகியோருக்கு மோகன்லால் மாட்டு இறைச்சி கறி சமைத்துக் கொடுக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி உள்ளது.