சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' நாளை உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. கல்கி எழுதிய நாவலை படமாக்கியுள்ளதால் இப்படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இப்படம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. அதற்கு சாட்சியாக இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளது.
இந்திய அளவில் முதல் நாள் வசூலில் தென்னிந்தியப் படங்கள்தான் சாதனை படைத்துள்ளன. 'ஆர்ஆர்ஆர், பாகுபலி 2, கேஜிஎப் 2' ஆகிய படங்கள் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. தமிழைப் பொறுத்தவரையில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் 60 கோடி வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
'பொன்னியின் செல்வன்' படம் முதல் நாள் வசூலாக 50 கோடியைத் தொட வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்நாளில் மட்டும் முன்பதிவு மூலம் கிட்டத்தட்ட இந்தியாவில் மட்டும் ரூ.15 கோடி வரை புக்கிங் நடந்துள்ளதாக தெரிகிறது. முதல்நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.20 முதல் 25 கோடி வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்தியா தவிர்த்து உலகின் மற்ற நாடுகளில் ஒட்டுமொத்தமாக முதல்நாளில் ரூ.20 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் உள்ளதைப் போல முதல் நாள் வரவேற்பு மற்ற மொழிகளில் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் படம் வெளிவந்த பின்புதான் பார்க்க ஆவலாக உள்ளதாகத் தெரிகிறது. அதற்குப் பின் 'பொன்னியின் செல்வன்' படம் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஆனாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் முன்பதிவு திறக்கப்பட்டுள்ள நாட்கள் வரை இப்படத்திற்கான முன்பதிவு 90 சதவீதத்திற்கும் மேல் நடந்துள்ளது என்கிறார்கள். அதனால், தமிழக வசூலில் புதிய சாதனையைப் படைக்கலாம்.




