நடிகர் டாக்டர் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் | பாலிவுட் நடிகர் ஜூனியர் மெஹ்மூத் காலமானார் | 2023ல் ஹிந்தியில் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தென்னிந்திய இயக்குனர்கள் | ‛முண்டாசுப்பட்டி' புகழ் நடிகர் ‛மதுரை' மோகன் காலமானார் | பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார் | என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் |
மணிரத்னம் இயக்கி உள்ள பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் வருகிற 29ம் தேதியே திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தோடு நானே வருவேன் படத்தையும் வெளியிடுவது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர் எஸ். தாணு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியிடவில்லை. செப்டம்பர் இறுதியில் வெளியிட வேண்டும் என்று கடந்த ஜூன் மாதமே முடிவு செய்து விட்டேன். அதோடு இந்த முறை 9 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் இந்த வாய்ப்பினை தவறவிட நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் தாணு. மேலும், இதற்கு முன்பு நான் தயாரித்த அசுரன், கர்ணன் போன்ற படங்களுக்கு அதிகாலை காட்சிகள் போடவில்லை. காலை எட்டு மணிக்குதான் முதல் காட்சி திரையிட்டோம். காரணம் அந்த காட்சியில்தான் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க முடியும். அதனால் தான் நானே வருவேன் படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.