மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வீரப்பன் கதையை மையமாக வைத்து, "வனயுத்தம் என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், நடிகர் கிஷோர், வீரப்பன் வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, "சென்னை-28 புகழ், விஜயலட்சுமி நடித்துள்ளார்.இந்த படத்தில், குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த கோர்ட், குறிப்பிட்ட சில காட்சிகளை வெட்டி விட்டு, படத்தை திரையிடலாம் என, அனுமதி அளித்தது.படக் குழுவின் கத்திரியில் சிக்கும் காட்சிகளில், பெரும்பாலான காட்சிகள், விஜயலட்சுமி நடித்த காட்சிகள் தானாம். இதனால், இந்த படம் வெளியானதும், தன் நடிப்பு பெரிதும் பேசப்படும் என, எதிர்பார்த்திருந்த, விஜயலட்சுமி, பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார். "படம், வெளியாக வேண்டுமானால், குறிப்பிட்ட காட்சிகளை வெட்டுவதை தவிர, வேறு வழியில்லை என்ற நிலையில், வேறு என்ன செய்ய முடியும்என, ஆதங்கப்படுகிறாராம், விஜயலட்சுமி.