நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் ஆரம்பமாகியது. கமல்ஹாசன் இந்த வாரம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனிடையே, எஞ்சியிருக்கும் காட்சிகளைப் படமாக்க போடப்பட்ட பட்ஜெட்டில் பெரும் தொகையை ஷங்கர் குறைத்துவிட்டாராம். அதனால் தயாரிப்பு நிறுவனமும் அந்தத் தொகையை உடனடியாக வழங்கத் தயாராகிவிட்டார்களாம். தற்போது சென்னையில் இப்படத்திற்காக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பிரம்மாண்ட அரங்கம் தயாராகி வருகிறது. அதில் படத்தின் பல முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடித்துத் தருவதாக ஷங்கர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். 2023 கோடை விடுமுறையில் 'இந்தியன் 2' வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.