ஷில்பா ஷெட்டியின் கணவர் போட்ட மானநஷ்ட ஈடு வழக்கு! | தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் ஜாலி டூர் சென்ற திரிஷா! | கஜினி- 2 படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! | அகண்டா 2ம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இனிமேல் யாரைப் பற்றியும் வீடியோ வெளியிட மாட்டேன்! மும்பை பறந்த பாடகி சுசித்ரா!! | வசூலைக் வாரி குவித்த லப்பர் பந்து | விக்னேஷ் சிவனுக்காக மூச்சு விடமால் பாடிய அனிரூத் | 69வது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்! | 108 விஷ்ணு கோவில்களில் படமாகும் 'நாகபந்தம்' | பிளாஷ்பேக்: போட்ட பாட்டையெல்லாம் ‛ஹிட்' ஆக்கிய டி.ஆர்.பாப்பா |
சந்துரு இயக்கத்தில், ரவி பர்சூர் இசையமைப்பில், உபேந்திரா, சுதீப், ஷ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னடப் படம் 'கப்ஜா'. இப்படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 17ம் தேதி மாலை யு டியுபில் வெளியிடப்பட்டது.
வெளியான இரண்டு நாட்களிலேயே இந்த டீசர் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு நடைபெறும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் குற்றச்சம்பவங்களைச் செய்து நிழல் உலக தாதாக்கள் எப்படி உருவானார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை என்கிறார் படத்தின் இயக்குனர் சந்துரு.
டீசரில் உள்ள காட்சிகள், படத்தின் பிரம்மாண்டம், பின்னணி இசை ஆகியவை இந்த டீசருக்கு எதிர்பார்க்காத அளவில் வரவேற்பு கிடைக்கக் காரணமாக அமைந்துள்ளது. இரண்டு நாளில் 2 கோடி பார்வைகள் என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல.
கன்னடத்திலிருந்து வந்த 'கேஜிஎப் 2' படம் இந்த ஆண்டில் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்தது. 'கப்ஜா' படத்தின் டீசருக்குக் கிடைத்த வரவேற்பால் இந்தப் படமும் 'கேஜிஎப் 2' வரிசையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு கன்னடத் திரையுலகத்தில் இப்போதே எழுந்துள்ளது.
பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.