சீதை வேடத்தில் நடிக்க அசைவம் தவிர்த்தேன்: கீர்த்தி சனோன் | ஓடிடி வருகையை அன்றே அறிந்தவன் நான்: கமல்ஹாசன் பெருமை | பார்லி., புதிய கட்டடம்! வீடியோ வெளியிட்ட ஷாருக்கானுக்கு மோடி கொடுத்த பதில்! | போலி செய்தியை பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்! இயக்குனர் உதயநிதி | நினைத்தாலே இனிக்கும் சீரியலில் என்ட்ரியாகும் பிக்பாஸ் தாமரை செல்வி! | நான் கொஞ்சம் 'ரக்கட்': பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி! | என்.டி.ராமா ராவ் நூற்றாண்டு பிறந்தநாள் | நடிகர் கமல்ஹாசனுக்கு ‛வாழ்நாள் சாதனையாளர்' விருது : ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார் | அஞ்சலியின் 50வது படம் 'ஈகை': பர்ஸ்ட் லுக் வெளியீடு | வீரன் படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு! |
அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ‛‛நானே வருவேன்''. எல்லி அவ்ரம், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார். சமீபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இரண்டு வேடங்களில் தனுஷ் நடித்திருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பின் செல்வராகவன் - தனுஷ் - யுவன் கூட்டணி இணைந்திருப்பதும் படம் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.
படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இம்மாதம் இறுதியில் படம் வெளியாகும் என கூறியிருந்தனர். ஆனால் தேதியை வெளியிடாமல் இருந்தனர். அதேசமயம் தனுஷ் நடித்துள்ள மற்றொரு படமான வாத்தி படத்தின் ரிலீஸ் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த படம் டிச., 2ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் வாத்தி ரிலீஸ் வந்த மறுநாளே, அதாவது இன்று(செப்., 20) நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படம் வருகிறது செப்., 29ல் தமிழ், தெலுங்கில் தியேட்டர்களில் வெளியாகிறது.
நானே வருவேன் ரிலீஸாகும் படத்திற்கு மறுநாள் மணிரத்னம் இயக்கி உள்ள பிரமாண்ட சரித்தி படமான பொன்னியின் செல்வன் 5 மொழிகளில் இந்திய முழுக்க வெளியாவது குறிப்பிடத்தக்கது.