பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு |
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியவர் கபிலன். தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார். இவரது 27 வயது மகள் தூரிகை சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய அதிர்வலைளை ஏற்படுத்தியது. அதையடுத்து நடந்த விசாரணையில் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்ததால் அவர் அந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது மகள் குறித்து கவிதை ஒன்று எழுதி இருக்கிறார் கபிலன். அதில்,
‛‛எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டாள் நான் எப்படி தூங்குவேன்.
எங்கே போனாள் என்று தெரியவில்லை. அவள் காலணி மட்டும் என் வாசலில்.
மின்விசிறி காற்று வாங்குவதற்கா உயிரை வாங்குவதற்கா?
அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்.
அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்கு தெரியாது. அவளே என் கடவுள்.
குழந்தையாக அவளை பள்ளிக்கு தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது. கண்ணீர் துளிகளுக்கு தெரியுமா கண்களின் வலி.
யாரிடம் பேசுவதுஎல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்.
கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பி இருக்க இருந்தாலும் இருக்கிறது இருட்டு.
பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்''
இவ்வாறு உருக்கமாக தெரிவித்துள்ளார்.