''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'லைகர்'. இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தின் முடிவுரையை எழுதிவிட்டார்கள் ரசிகர்கள். படத்தின் இயக்குனர் பூரி ஸ்கிரிப்ட்டை ஒழுங்காக எழுதாததே அதற்குக் காரணம்.
முதல் நாளிலேயே படம் அடி வாங்கியதால், படத்தை வாங்கிய தெலுங்கு வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால், நஷ்ட ஈடு வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சார்மி கவுரிடம் பேசியதாகவும், ஆனால், அவர் சரியாகப் பிடி கொடுத்து பேசவில்லை என்றும் சொன்னார்கள். அடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடமும் முறையிடும் வேலைகளும் நடந்தன. அவரை சந்திக்க மறுத்தால் தெலுங்கு பிலிம் சேம்பரிடம் புகார் அளிக்கப் போவதாக வினியோகஸ்தர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது. நேற்று முதல் வினியோகஸ்தர்களுக்கு ஏரியா வாரியாக நஷ்டத் தொகையை வழங்கி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'ஆச்சார்யா' படத்தின் படுதோல்விக்குப் பிறகு இப்படி நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. அதற்கடுத்து 'லைகர்' படத்திற்கு வழங்கப்படுகிறது.