என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தங்கர் பச்சான் இயக்கி வரும் புதிய படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்து வருகின்றனர்.
படம் பற்றி தங்கர் பச்சான் கூறுகையில், ''பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள். மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் நிறைந்து இருக்கும். உறவுகளின் சிக்கல்கள் குறித்தும் பேசுகிறது. என்னுடைய சிறுகதையை தழுவித்தான் இந்த படத்தை எடுக்கிறேன். ஒவ்வொருத்தரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா. இதை நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கிட்டால் எல்லோரும் மாட்டிக்குவோம். அழகிக்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது.
நாஞ்சில் நாடன் கதையை எடுத்தேன். 'கல்வெட்டு' கதையை 'அழகி'யாக்கினேன். 'அம்மாவின் கைப்பேசி', 'ஒன்பது ரூபாய் நோட்டு'. அப்படிதான், "கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன" இன்ற என் சிறு கதை, இப்போது "கருமேகங்கள் கலைகின்றன"வாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.