'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் |

ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளிவந்தது.
முதல் மூன்று நாட்களில் ரூ.250 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. சுமார் 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 700 கோடி வசூலைக் கடந்தால்தான் லாபகரமான படமாக அமையும் என பாலிவுட்டில் தெரிவித்திருந்தார்கள். ஆனால், முதல் மூன்று நாள் வசூல் தவிர வார நாட்களில் இப்படத்தின் வசூல் வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் 40 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாம்.
இதனால், படம் எதிர்பார்க்கப்பட்ட வசூலைப் பெற முடியாமல் போகும் என்றும் சொல்கிறார்கள். எனவே, படம் நஷ்டத்தை நோக்கி நகர்வதைத் தவிர்க்க முடியாது என்றும் தெரிவிக்கிறார்கள். ஓடிடி மற்றும் இதர உரிமைகள் மூலம் தயாரிப்பாளர் பணத்தைத் தேற்றலாம். ஆனால், தியேட்டர் உரிமைகளை வாங்கியவர்களுக்கு சோதனையாக இருக்கும் என்கிறார்கள்.