தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா |
தமிழ் சினிமாவில் சில படங்களை எப்போதுமே மறக்க முடியாது. 90களில் வெளிவந்த படங்களில் இப்போதும் பேசப்படும் படங்களில் ஒரு சில படங்கள்தான் இருக்கின்றன. அவற்றில் 1991ல் வெளிவந்த 'சின்னத்தம்பி', 1994ல் வெளிவந்த 'நாட்டாமை' ஆகிய படங்களுக்கு முக்கிய இடமுண்டு.
அற்புதமான குடும்பக் கதையாக வெளிவந்த அந்தப் படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியைப் பெற்று வெள்ளி விழா கொண்டாடின. அந்தப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 'நாட்டாமை' படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாகவும், 'சின்னத்தம்பி' படத்தில் பிரபுவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் குஷ்பு. இவர்கள் மூவரும் தற்போது விஜய், ராஷ்மிகா நடிக்கும் 'வாரிசு' படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
குஷ்பு அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் சரத்குமார், பிரபு ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றைப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அந்தக் கால ஞாபகம் வந்திருக்கும். பிரபுவின் தோள் மீது சாய்ந்து ஆனந்தமாக சிரிக்கும் ஒரு புகைப்படத்தை மட்டும் தனியாகப் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
“காலம் யாவும் பேரின்பம், காணும் நேரம் ஆனந்தம்,” என்ற 'சின்னத்தம்பி - போவோமா ஊர்கோலம்' பாடல் குஷ்புவுக்கு ஞாபகம் வந்திருக்குமோ ?.