லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
அயன் முகர்ஜி இயக்கத்தில், ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடித்து ஐந்து மொழிகளில் வெளியான படம் 'பிரம்மாஸ்திரா'. மூன்று பாகங்களாக வெளிவர உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் வெளிவந்தது.
பெரும் எதர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் 'பாய்காட்' டிரெண்டிங்குகளையும் மீறி குறிப்பிடத்தக்க வரவேற்பையும், நல்ல வசூலையும் பெற்றது. 25 நாட்களில் 425 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த 2022ம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.
முதல் பாகம் 'பிரம்மாஸ்திரா - சிவா' என்று வெளியாகிய நிலையில் இரண்டாம் பாகத்தை 'பிரம்மாஸ்திரா - தேவ்' என வெளியிட உள்ளனர். அடுத்து வெளியாக உள்ள இரண்டு பாகங்களில் மேலும் சில கதாபாத்திரங்கள் படத்தில் இடம் பெறும் என இயக்குனர் அயன் முகர்ஜி தெரிவித்துள்ளார். அதோடு 'அஸ்திரங்கள்' பற்றிய வெப் தொடர் ஒன்றை 9 பாகங்களாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கூறியிருக்கிறார்.