பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கரீனா கபூரும் ஒருவர். வெளியூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு இவர் வந்தார். காரை விட்டு அவர் இறங்கியதும் அவரை கண்ட அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். கரீனா கபூர் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். ஒரு சிலர் அவர் தோள் மீது கை போட்டு செல்பி எடுக்க முயல மிரண்டுவிட்டார். பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக விமான நிலையத்திற்குள் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.