''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகர் பிரபாஸின் பெரியப்பாவுமான கிருஷ்ணம் ராஜு சமீபத்தில் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்களும் மொழி பாகுபாடு இல்லாமல் அனைத்து திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து மம்முட்டி உள்ளிட்ட பலபேர் அவருக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கிருஷ்ணம் ராஜுவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லையே என்று தனது வருத்தத்தை சோசியல் மீடியா மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ரிபெல் ஹீரோ கிருஷ்ணம் ராஜுவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அவர் தன்னுடைய சொந்த குழந்தைகள் போலவே ஒவ்வொருவரையும் அக்கறை எடுத்து கவனிப்பார். அதுமட்டுமல்ல ஒரு தாயைப்போல தானே அருகில் இருந்து உணவு பரிமாறுவார். அந்த அன்பையும் கவனிப்பையும் நான் மிஸ் பண்ணுகிறேன். என்னுடைய துரதிர்ஷ்டம் நான் அவருடைய உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தூரத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். அவருடைய அந்த பெருமை பிரபாஸ் மூலமாக எப்போதுமே உயிருடன் இருக்கும்” என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பிசியாக இருந்த சமயத்தில் பிரபாஸை வைத்து ரிபெல் என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.