அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி பெரிய வெற்றியைப் பெற்றது.
படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. படத்தில் 'சாமி சாமி…' என்ற பாடலுக்கு ராஷ்மிகா நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார். அவருடைய ஒவ்வொரு மூவ்மென்ட்டும் அவ்வளவு அட்டகாசமாக இருந்தது. கிளாமராக இருந்தாலும் அதையெல்லாம் மீறி பாடல் வரவேற்பைப் பெற்றது.
அப்பாடலின் ஹிந்திப் பதிப்பிற்கு சில பள்ளிக் குழந்தைகள் நடனமாடிய வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் நேற்று பதிவிட்டு ராஷ்மிகாவை டேக் செய்திருந்தார். அதில் ஒரு சிறுமி அட்டகாசமாக நடனமாடியிருந்தார். அந்த வீடியோவைப் பகிர்ந்த ராஷ்மிகா, “என்னுடைய இன்றைய நாள் இதுதான். இந்த க்யூட்டியை நான் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன், எப்படி ?” எனக் கேட்டுள்ளார்.