ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதிய விஷயத்தையும் கமல்தான் ஆரம்பித்து வைப்பார். தனது விக்ரம் படத்தின் புரமோசனுக்காக அவர் கடைசி ஒரு வாரம் மின்னல் வேக சுற்றுப் பயணம் செய்தார். அது நல்ல பலன் கொடுக்கவே, இப்போது பலரும் கிளம்பி விட்டார்கள். கோப்ரா படத்திற்கு விக்ரம் சென்றார். விருமன் படத்திற்காக கார்த்தி சென்றார், கேப்டன் படத்திற்கு ஆர்யா சென்றுள்ளார். ஏற்கெனவே யானை படத்திற்கு சென்ற அருண் விஜய் இப்போது சினம் படத்திற்காக தமிழகத்தை ஒரு ரவுண்ட் அடித்து திரும்பி இருக்கிறார்.
தமிழகம் முழுவதும் 13 நகரங்களுக்கு 3 நாள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கும்பகோணம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய நகரங்களுக்கு சென்று வந்திருக்கிறார். அவருடன் ஹீரோயின் பாலக் லால்வானி, காளி வெங்கட் ஆகியோரும் உடன் சென்றனர். சினம் படம் வருகிற 16ம் தேதி வெளியாகிறது.
படத்தினை விஜயகுமார் தயாரித்துள்ளார். ஜிஎன்ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார். அருண் விஜய்யுடன் பாலக் லால்வானி, காளி வெங்கட், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷபீர் இசை அமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.