சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த வாரம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் நீர்சத்து குறைவு, மார்புசளி பிரச்னைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ''கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுவருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம் என்று மருத்துவமனை அறிக்கை தெரிவித்தாலும் அவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்பது அனைவரையும் கவலை கொள்ளச் செய்கிறது.
இந்த நிலையில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதிகா தனது வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்து திரும்பிய உடன் மருத்துவமனைக்கு சென்று பாரதிராஜாவை சந்தித்தார். பாரதிராஜாவுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டு அவர் பதிவிட்டு இருப்பதாவது: எனது குரு பாரதிராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவரை இந்த நிலையில் பார்க்க என்னால் முடியவில்லை. அவர் தொடர்ந்து குணமடைந்து வருகிறார். பிரார்த்தனைகளுக்கு எப்போதும் சக்தி அதிகம். அவருக்காக தொடர்ந்து பிரார்த்திப்பேன். மருத்துமனை நிர்வாகத்திற்கு நன்றி. என்று எழுதியிருக்கிறார்.




