‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சித்து குமார். சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த் ஆகியோரது நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்திற்கு இசை அமைத்தார்.
தற்போது மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணை நம்பாதே, சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் நூறுகோடி வானவில், விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் ம.பொசி, அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், சித்து குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி ராஜி என்பவரை மணக்கிறார். ராஜி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மனிதவளம் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றுகிறார். பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட இந்த திருமணம் வரும் செப்டம்பர் 9ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.