காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழில் ஈரம், மிருகம், யாகவராயினும் நாகாக்க உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஆதி. அதே போல் ஜி.வி .பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. ஆதியும், நிக்கி கல்ராணியும் யாகவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி கடந்த மே மாதம் 18ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தங்களுக்கு திருமணமாகி 100 நாள் ஆகிவிட்டதை அடுத்து அதை கொண்டாடுவதற்காக பிரான்சில் உள்ள பாரிஸ் நகருக்கு ஆதியும், நிக்கி கல்ராணியும் சென்றுள்ளார்கள். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிக்கி கல்ராணி, நூறாவது திருமண நாளை காதல் நகரத்தில் சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.