ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 31ம் தேதி திரைக்கு வருகிறது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து விக்ரம் மூன்று படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார்.
அதில் ஒரு படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். அதன் பிறகு கோப்ரா படத்தை இயக்கி உள்ள அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் நடிக்க போகிறார். இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து லூசியா, யுடர்ன் போன்ற படங்களை இயக்கிய பவன் குமார் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். மேலும், தற்போது பா.ரஞ்சித் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் அடுத்தபடியாக அஜய் ஞானமுத்து, பவன் குமார் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார் விக்ரம்.




