‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் சந்தானம். தனது டைமிங் காமெடி மூலம் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்த சந்தானம், ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். அதோடு காமெடியனாக நடிப்பதை முழுமையாக தவிர்த்து வந்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு போன்ற சில படங்கள் ஓரளவு வெற்றி பெற்றபோதும் சமீபத்திய படங்கள் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சந்தானம். அப்போது ஆர்யா நடிக்கும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் காமெடியாக நடிக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வருமாறு என்னிடத்தில் கேட்டுக் கொண்ட ஆர்யா, என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் என்று நான் கூறினேன். அதற்கு ஆர்யா, இங்கேயும் வந்து சும்மா இருந்துட்டு போ என்று சொல்லிதான் என்னை அழைத்தார் என்றும் காமெடியாக பேசினார். அந்த வகையில் மீண்டும் சந்தானம் காமெடியனாக நடிக்கப் போவதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது சந்தானமே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.