பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடன இயக்குனர்கள் நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் மாறிக் கொண்டிருக்கும் காலத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் ‛யதா ராஜா ததா பிரஜா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. 'சினிமா பாண்டி' புகழ் விகாஸ் மற்றொரு நாயகனாகவும், சிருஷ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார். ஓம் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் விட்டலா மற்றும் ஹரேஷ் படேல் தயாரிக்கின்றனர். ஆயுஷ் ஷர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தில் நடிப்பது பற்றி ஜானி மாஸ்டர் கூறியதாவது: நடனம் மற்றும் விளம்பரங்களுக்கு மேலாக எனது அடையாளத்தை வளர்க்க, இதுபோன்ற ஒரு நல்ல கதையுடன் வர முடிவு செய்துள்ளேன். தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தைக் கொண்டு வருகிறோம். இது கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய அரசியல் நாடகம். நகைச்சுவை, நையாண்டிகள், சமூக செய்திகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முழுக்க முழுக்க பொழுதுபோக்காக இருக்கும். என்றார்.