துல்கர் 40 : எஸ்.ஜே சூர்யா வெளியே... மிஷ்கின் உள்ளே... | எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மேக்னா ராஜ் | பிளாஷ்பேக் : ஹிட்லராக நடித்த சிவாஜி | பிளாஷ்பேக்: குறைந்த படங்களில் மட்டும் நடித்த புஷ்பவல்லி | நடுத்தர குடும்பத்து பின்னணியில் உருவாகும் '3பிஎச்கே' | நீளமான தலைப்பில் 3 காதல் கதை | இரட்டை வேடத்தில் நடிக்கும் தினேஷ் | ரெட்ரோ பட வாய்ப்பு : மனம் திறந்த பூஜா ஹெக்டே | முதன்முறையாக கார்த்தி உடன் நடிக்கும் வடிவேலு | ஹாலிவுட் நடிகைகள் கெட்டப்புக்கு மாறிய சமந்தா |
கமல் நடித்த விக்ரம் படத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே கமலின் தீவிர புரமோசன் பணிகள்தான். அதையே இப்போது எல்லோரும் பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள். தற்போது கோப்ரா படத்தை கமலின் பாணியில் புரமோசன் செய்து வருகிறார் விக்ரம். படம் வருகிற 31ம் தேதி வெளிவர இருப்பதால் அதற்கு முன்னதாக சூறாவளி சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறார் விக்ரம்.
அதன்படி இன்று (23ம் தேதி) திருச்சி ஜோசப் கல்லூரியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் மாணவர்கள் மத்தியில் தோன்றி கோப்ரா குறித்து பேசுகிறார். நாளை (24ம் தேதி) கோவை செல்கிறார், 25ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கும் கோப்ரா பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். அதை முடித்து விட்டு 26ம் தேதி கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். அடுத்த நாள் 27ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்கிறார், 28ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப் பயணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.