வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் கைதி. தற்போது விஜய் 67வது பட வேலைகளில் ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதையடுத்து கைதி-2 படத்தில் மீண்டும் கார்த்தியுடன் இணையப்போகிறார். இந்த நிலையில் கார்த்தி அளித்துள்ள ஒரு பேட்டியில், கமல் நடித்த விக்ரம் படத்தில் கைதி படத்தின் டெல்லி ரோலில் சில காட்சிகளில் நடிக்குமாறு தன்னை லோகேஷ் கனகராஜ் அழைத்ததாகவும், அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் நீண்ட தலைமுடியை எடுத்து விட்டு நடிக்க முடியாது என்பதால் அப்படத்தில் குரல் மட்டுமே கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார். அப்படி இல்லை என்றால் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டர் போலவே நானும் விக்ரம் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, 2023ம் ஆண்டில் கைதி- 2 படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ள கார்த்தி, இந்த கைதி-2 படத்திலும் விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டர் இடம் பெறுகிறது. அதனால் அப்படத்தில் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்க போகிறேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.