Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து

17 ஆக, 2022 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Indian-2-team-joints-:-Kamal-wishes-and-shankar-reply

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் ஏற்கெனவே ரஜினிகாந்த் நடிக்க '2.0' படத்தைத் தயாரித்திருந்தார். அந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை ஈட்டித் தரவில்லை. இருப்பினும் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க 'இந்தியன் 2' படத்தை 2019ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பித்தார்கள். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் மூவர் மரணமடைந்தனர். அதற்கு அடுத்த மாதமே கொரோனா வந்துவிட்டதால் படப்பிடிப்பு நின்றது.

அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்ற நிலையில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயக்குனர் ஷங்கர் மீது நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்க ஷங்கர் சென்றதே அதற்குக் காரணம். பின்னர்தான் லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை என்ற விஷயம் வெளியில் தெரிந்தது. லைக்கா நிறுவனம் மீதும் ஷங்கர் குற்றம் சாட்டினார். ஷங்கர் வேறு படங்களை இயக்கத் தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் படத்தில் ஷங்கர் பிஸியாகவே இருந்தார்.

'இந்தியன் 2' மீண்டும் ஆரம்பமாகுமா, ஆகாதா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்திற்கு உயிர் கொடுக்க ஆரம்பித்தனர். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வேலைகள் பரபரப்பாக நடக்க ஆரம்பித்தன. தற்போது சென்னையில் படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி உள்ளன.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள வாழ்த்தில், “இந்தியன்' என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு இயக்குனர் ஷங்கர், “நிச்சயமாக 'இந்தியரே'. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது, உங்கள் வாழ்த்து மிக்க நன்றி கமல்ஹாசன் சார்,” என பதிலளித்துள்ளார்.

மேலும், இயக்குனர் ஷங்கருக்கு, 'இந்தியன் 2' படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனமும், “தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஒரு அற்புதமான ஆண்டாகா, உங்கள் பார்வையால் எங்களை ஊக்கப்படுத்துங்கள்,” என வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஒரு சிலருடைய வாழ்த்துகளுக்கு பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனர் ஷங்கர் இன்னும் லைக்கா நிறுவனத்திற்கு பதிலளிக்கவில்லை. இருப்பினும் தங்கள் பிரச்சினைகளை மறந்து 'இந்தியன் 2' படத்தில் மீண்டும் இணைய உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு முன்பாக, இந்த வாழ்த்துகளின் மூலம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில்இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த ... 'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் 'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

18 ஆக, 2022 - 10:08 Report Abuse
அஜய் ஷங்கர் சார், தாங்கள் ஒரு பிரம்மாண்ட இயக்குனர். உங்கள் பிரம்மாண்டமான சிந்தனைகளை திரைக்கு கொண்டு வருவது தயாரிப்பாளர்கள் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் திறமையை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு உரிய மரியாதை தாருங்கள். தாங்கள் தயாரிக்கும் படங்கள் மட்டும் சிறிய பட்ஜெட் படங்கள் (வெயில், காதல் உட்பட). ஆனால் வேறு தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்கும் படங்கள் ( ஐ, 2.0 உட்பட படங்கள்) பெரிய தொகையில் தயாரிக்க வேண்டும் என்று ஆசை படுவது சரியா?. எந்திரன் வரைக்கும் உங்கள் படங்களில் திரைக்கதைக்கு ஏற்ப பிரம்மாண்டம் இருந்தது. தற்போது ஐ, 2.0 படங்களில் பிரம்மாண்டம் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் அதற்கேற்ப திரைக்கதை- வசனம் வலுவாக இல்லை. முதலில் திரைமொழி தெரிந்த எழுத்தாளர்களுடன் ( சுஜாதா போன்ற எழுத்தாளர்) பணி புரியுங்கள். ஆலோசனை பெற்று வாருங்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in