காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் |

நடிகர் மாதவன் இயக்கம், நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'ராக்கெட்ரி'. இந்திய விண்வெளித் துறையின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக அந்தப் படம் வெளிவந்தது.
அந்தப் படத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒருவர், “'ராக்கெட்ரி' படத்திற்கு பைனான்ஸ் செய்ததால் மாதவன் தன்னுடைய வீட்டை இழந்தார். அதே சமயம் அவரது மகன் வேதாந்த் நாட்டிற்காக நீச்சலில் பதக்கங்களைப் பெறுகிறார்,” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவை வேறொரு ரசிகர்கள் மாதவனுக்கு டேக் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள மாதவன், “என் தியாகத்திற்கு தயவு செய்து அதிகமாக ஆதரவளிக்காதீர்கள். நான் எனது வீட்டையோ வேறு எதையுமோ இழக்கவில்லை. உண்மையில் 'ராக்கெட்ரி' சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஆண்டு அதிகமான வருமான வரியைப் பெருமையுடன் செலுத்த உள்ளார்கள். கடவுளின் அருளால், நாங்கள் அனைவருமே மிகச் சிறப்பான மற்றும் பெருமையான லாபத்தை ஈட்டியுள்ளோம். நான் இன்னும் எனது வீட்டில்தான் நேசத்துடன் வசிக்கிறேன்,” என 'ராக்கெட்ரி' பற்றி சந்தேகங்கள் அனைத்திற்கும் சேர்த்து பதிலளித்துள்ளார்.