2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'விக்ரம்'. தமிழ் சினிமாவில் முந்தைய வசூல் சாதனைகள் பலவற்றை இந்தப் படம் முறியடித்தது. கமல்ஹாசனின் இத்தனை ஆண்டு கால சினிமா வரலாற்றில் அவருக்கு அதிகப்படியான வசூலையும், லாபத்தையும் பெற்றுக் கொடுத்த படம்.
இப்படம் ஓடிடியில் கடந்த மாதம் ஜுலை 8ம் தேதி வெளியானது. ஓடிடியில் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் வெளியாகி இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்பு வேறு எந்தப் படமும் ஓடிடியில் வெளியான பின்னும் 75 நாட்களைத் தொட்டதில்லை. அதிலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது 'விக்ரம்'.
இப்படத்தில் கிடைத்த லாபத்தால் கமல்ஹாசன் அடுத்தடுத்து அவரது சொந்த நிறுவனத்தின் மூலம் மேலும் சில புதிய படங்களைத் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அப்படங்களில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.