பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற பல பிரபலங்கள் இணைந்து நடனமாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த வார எபிசோடு 'ஆஹா கல்யாணம்' என்ற கான்செப்ட்டில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்காக ஜோடிகள் அனைவரும் திருமணத்தை சித்தரிக்கும் வகையில் காஸ்டியூம் அணிந்து நடனமாடி வருகின்றனர்.
அதில், ஆர்த்தி மற்றும் கணேஷ் தம்பதியினர் சமீபத்தில் நடந்து முடிந்து சென்ஷேனலான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை கான்செப்ட்டாக வைத்து நடனமாடியுள்ளனர். இதற்காக திருமணத்தன்று நயன்தாரா அணிந்திருந்த உடையை போலவே ஆர்த்தியும் சிவப்பு நிற லெஹங்கா உடையை அணிந்துள்ளார். அதன் போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆர்த்தியின் பதிவை பகிர்ந்து 'ப்யூட்டிபுல்' என கமெண்ட் அடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.