44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் |

'பூவே உனக்காக' சீரியலில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் பல முக்கிய கதாபாத்திரங்கள் அடிக்கடி ரீப்ளேஸ் செய்யப்பட்டதால் டிஆர்பியில் பெர்பார்மன்ஸ் செய்ய முடியாமல் திணறியது. இதனையடுத்து சமீபத்தில் இந்த தொடர் முடித்து வைக்கப்பட்டது. இந்த சீரியலின் தொடக்கத்தில் கதாநாயகியாக பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. கன்னடத்து பைங்கிளியான இவர் இந்த தொடரில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களையும் கவர்ந்து கனவு கன்னி ஆனார். சீரியலை விட்டு விலகிய பின் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ரசிகர்கள் பலரும் ராதிகா ப்ரீத்தி ஏன் சீரியலை விட்டு விலகினார்? மீண்டும் சீரியலில் நடிப்பாரா? என கேள்விகள் கேட்டு வந்தனர். இதற்கிடையில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்த 'நாதிரு தின்னா' திரைப்படத்தின் ரிலீஸ் புரோமோஷன்களும் கலைக்கட்டியதால் அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வரமாட்டார் என ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ராதிகா ப்ரீத்தி மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளார். ஒரு பிரபல தொலைக்காட்சியில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால், ராதிகா ப்ரீத்தியின் ரசிகர்கள் பலரும், அவரது ரீ- என்ட்ரியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.




