டிரணட் ஆகும் சிவன் பாடல் | வசூலை வாரிக் குவிக்கும் சீதா ராமம் | இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு | தமிழ் ராக்கர்ஸ் : கலை உலகின் வலியை சொல்லும் தொடர்: அறிவழகன் | வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 புரோமோ, தமிழில் எப்போது ? | பட்டதெல்லாம் போதும், இனி படம் தயாரிக்க மாட்டேன்: அமலாபால் வேதனை | தேசப்பற்றை காட்டிய மலையாள கலைஞர்கள் : கும்பகர்ண தூக்கத்தில் தமிழ் ஹீரோக்கள் | ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் |
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு உற்சாகம் அடைந்துள்ள கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக இளவட்டை ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பதிலும் தீவிரம் கட்டி வருகிறார். அந்த வகையில் தனது நிறுவனம் தயாரிக்கும் 51வது படத்தை சிவகார்த்திகேயனை வைத்து தயாரிக்கும் கமலஹாசன், 52 வது படத்தில் தானே நடிக்கிறார். அந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். அதையடுத்து 54 வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போவதாக கமல்ஹாசனே ஒரு மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் அதற்கு முன்னதாக ராஜ்கமல் பிலிம்ஸின் 53வது படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.