நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
மாஜி ஹீரோயின்களான குஷ்புவும், ரம்பாவும் விஜய் நடித்த மின்சார கண்ணா என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள். அப்போது அவர்களுக்கிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு பிறகு ரம்பா கனடா நாட்டுக்கு சென்றபோதும் அவர்களின் நட்பு விட்டுப்போகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரம்பா தனது குழந்தைகளுடன் சென்னை வந்தபோது தனது மகள்களுடன் சென்று சந்தித்துள்ளார் குஷ்பு. அப்போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள குஷ்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது தோழி ரம்பா மற்றும் அவரது குழந்தைகளை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அவருடன் பிரியாணி சாப்பிட்டதும் அவரது குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்ததும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.