'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'நேரம், பிரேமம்' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மலையாள இயக்குனரான அல்போன்ஸ் புத்ரன். அடிக்கடி தமிழ்ப் படங்களைப் பற்றியும் தமிழ்க் கலைஞர்களைப் பற்றியும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவார். சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஒரு திரைப்படக் கல்லூரியை ஆரம்பித்து அதில் தினமும் 45 நிமிடங்களாவது வகுப்புகள் எடுக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
இன்று கமல்ஹாசன், நின்று போன 'மருதநாயகம்' படத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “கமல்ஹாசன் சார், விரைவில் 'மருதநாயகம்' படத்தை உருவாக்குங்கள். அதைப் பார்க்கக் காத்திருக்கிறேன். இந்தப் பதிவிற்கு 30 ஆயிரம் லைக்குகுள் தாண்டினால் நீங்கள் அப்படத்தை எடுப்பீர்களா. 30 ஆயிரம் என்பது எனது பக்கத்திற்கு அதிகமானது, ஆனால், உங்களுக்கு ஜுஜுபியாக இருக்கலாம். ஒரு ரசிகனாகவும், சினிமா ரசிகனாகவும் எனது ஒரே வேண்டுகோள். உங்களுக்குப் பிடித்த விதத்தில் செய்யுங்கள். “Thel Alchemist” ல் சொல்லப்பட்டுள்ளது. சரியான வார்த்தைகள் நினைவில் இல்லை. ஆனால், அதன் அர்த்தம்…“உங்கள் முழு இதயத்துடனும், அன்புடனும் ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அசாத்தியமானதை அடைய பிரபஞ்சம் உங்களுக்கு உதவும். நீங்கள் உலக நாயகன் என்பதால் இந்த உலகம் உங்களுக்கு இதயத்தைக் கொடுக்கக் கூடும் சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.