நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' | அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! |

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை தழுவி சமீபத்தில் வெளியான படம் ‛ராக்கெட்ரி - தி நம்பி எபெக்ட்'. அவரது வேடத்தில் மாதவன் நடித்து, இயக்கமும் செய்திருந்தார். விமர்சகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. தற்போது ஓடிடியிலும் இந்த படம் வெளியாகி உள்ளது.
இந்த படம் வெளியான சமயத்தில் படத்தை பாராட்டிய ரஜினி, அனைத்து இளைஞர்களும் பார்க்க வேண்டிய ஒரு படம் என பாராட்டியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் ரியல் ஹீரோவான நம்பி நாராயணன் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்திற்கு சென்று ரஜினியை சந்தித்தார். இந்த போட்டோ வைரலானது.