என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
திருச்சி : திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
திருச்சியில், 47வது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி, கடந்த 24ம் தேதி முதல், கே.க.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 27ம் தேதி, மாஸ்டர் பிரிவில், 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் வகை போட்டிகளில், நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு, இலக்கை நோக்கி சுட்டார்.
இதில், நடிகர் அஜித் குமார் அணி சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் பிரிவு, 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் வெண்கல பதக்கமும் என 6 பதக்கங்களை வென்றது.
அஜித்குமார் உட்பட மூன்று பேர் கலந்த கொண்ட போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் பதக்கங்களை வென்று உள்ளதாக, ரைபிள் கிளப் தரப்பில் தெரிவித்தனர். இதற்கான பரிசளிப்பு விழா நாளை (31ம் தேதி) நடைபெற உள்ளது.