'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வேலைக்காரன் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு ஐந்து வருடம் இடைவெளி எடுத்துக் கொண்ட இயக்குனர் மோகன் ராஜா தான் அறிமுகமான தெலுங்கு திரையுலகிலேயே மீண்டும் படம் இயக்கி வருகிறார். மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்ஷனில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக, காட் பாதர் என்கிற பெயரில் சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்து இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன்ராஜா.
இந்த படத்தில் கிளைமாக்ஸில் இடம்பெறும் டான்ஸ் ஒன்றை வடிவமைத்து கொடுத்துள்ளார் பிரபுதேவா. படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இத்தனை வருடங்களில் பிரபுதேவாவுடன் மோகன் ராஜா இணைந்து பணியாற்றுவது இதுதான் முதல்முறை. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பிரபுதேவா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் இயக்கிய நுவ்வொஸ்தானே நெனொத்தண்டனா என்கிற படத்தை, தமிழில் சம்திங் சம்திங் என்கிற பெயரில் மோகன் ராஜா ரீமேக் செய்து இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.