''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னை அருகே, சரித்திரப் புகழ் வாய்ந்த மாமல்லபுரம் நகரில் நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு அதன் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. தொடக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார்.
மிகவும் பிரம்மாண்டமாக முப்பரிமாண முறையில் இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகள் பலரது பாராட்டைப் பெற்றது. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள், விளையாட்டுப் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் விக்னேஷ் சிவனை அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்து விக்னேஷ் சிவன், “நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய நிகழ்வு. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே தனிப்பட்ட முறையிலும், நிகழ்ச்சி முடிந்த பின்னர் தொலைபேசியிலும் பாராட்டிய ரஜினி சாருக்கு நன்றி. உங்களின் குரலைக் கேட்டதும், பாராட்டியதும் மிகவும் மகிழ்ச்சிகரமானது. அந்நாளை மேலும் அழகாக்கியதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.