பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது இயக்கி வரும் பான்--இந்தியா படம் 'புராஜக்ட் கே'. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஹிந்தி, தெலுங்கில் தயாராகி வரும் இப்படம் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி தத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜுலை மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமானது. தொடர்ந்து சீரான இடைவெளியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டில்தான் முடிவடைய உள்ளது. அந்த வருடத்திலேயே இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து 2024ல் முடிக்க உள்ளார்களாம். சுமார் 10 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.