‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், அதன் பிறகு விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தற்போது மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா என பல படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் பெரும்பாலும் ஹோம்லியான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கிளாமர் பக்கமும் திரும்பி வருகிறார். அதன் காரணமாகவே சமீபத்திய அவர் வெளியிடும் போட்டோ ஷூட்டுகளில் சற்று கிளாமர் வெளிப்படுகிறது. இந்த நிலையில் தனது சினிமா தோழிகளாக ஜனனி, சம்யுக்தா ஆகியோருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். பாரிஸில் உள்ள ஈபிள் டவர் உள்ளிட்ட பல இடங்களில் அவர் குட்டையான உடையணிந்து ஸ்டைலாக போட்டோஷூட் எடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படங்கள் வைரலாகின.