பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற மனிதனுக்கும் இயந்திரத்திற்குமான பாசத்தை மையமாக வைத்து சென்டிமென்ட்டாக உருவான ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன். இவர் தற்போது மலையாளத்தில் குஞ்சாகோ போபன் நடிப்பில் உருவாகி வரும் 'நின்ன தான் கேஸ் கொடு' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தமிழ் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
39 வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான காதோடு காதோரம் என்கிற படத்தில் இடம்பெற்ற தேவதூதர் பாடி என்கிற பாடலை இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் பாடுவது போல ரீ கிரியேட் செய்து உள்ளார் இயக்குனர் ரதிஷ் பாலகிருஷ்ணன். சமீபத்தில் இந்த பாடல் சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த பாடலை வெளியிட்ட நடிகர் மம்முட்டி, “37 வருடங்களுக்கு முன் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட இந்த பாடலை தற்போது நின்னதான் கேஸ் கொடு என்கிற படத்திற்காக ரீ கிரியேட் செய்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி. அன்பான குஞ்சாக்கோ போபன் மற்றும் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். இதன் ஒரிஜினல் பாடலை கே.ஜே ஜேசுதாஸ் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.