பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் | படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும் - ‛வாத்தி' டிரைலர் வெளியீடு |
ஹனு ராகவ்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா நடித்துள்ள படம் ‛சீதா ராமம்'. தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் ஆக., 5ல் திரைக்கு வருகிறது. நேற்றைய தினம் தெலுங்கு டிரைலரை வெளியிட்டனர். இன்று(ஜூலை 26) தமிழ் டிரைலரை சென்னையில் வெளியிட்டனர்.
டிரைலரில் 20 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் வேலை பார்த்த ராமின் கடிதத்தை சீதாவிடம் சேர்க்க வேண்டிய பொறுப்பு ராஷ்மிகாவிற்கு. அதில் அவர் எதிர்கொள்ளும் சவால்களும், திருப்பங்களும் தான் கதை என புரிந்து கொள்ள முடிகிறது. வித்தியாசமான ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த டிரைலரும், அதன் காட்சி அமைப்புகள், துல்கர், மிருணாள், ராஷ்மிகா உள்ளிட்டோரின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.