பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
விஷால் நடித்துள்ள லத்தி படத்தை அவரது நண்பர்களும், நடிகர்களுமான நந்தா, ரமணா தயாரித்துள்ளனர். சுனைனா ஹீரோயின். இதில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். வினோத்குமார் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார், யுவன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் முதலில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிள் தோற்றதில் தோன்றினார். பின்னர் அவர் பேசியதாவது: இந்த படம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீஸ் கான்ஸ்டபிள்களின் வலி, தியாகம், வீரத்தை பேசும் படமாக உருவாகி உள்ளது.
இங்கு வந்திருக்கும் உதயநிதி ஸ்டாலினும், நானும் பள்ளியிலும், கல்லூரியிலும் ஒன்றாக படித்தவர்கள், பள்ளியில் படிக்கும்போது மற்ற பள்ளிகளுக்கு சைட் அடிக்க ஒன்றாக சென்றிருக்கிறோம். என்னை பற்றிய ரகசியங்கள் அவருக்கும், அவரைப் பற்றிய ரகசியங்கள் எனக்கு தெரியும். இருவரையும் கடத்தி வைத்துக் கொண்டு கேட்டால் அது தெரிய வரும்.
அவரது தந்தை தேர்தல் பிரச்சாரம் செய்யப்போகும்போது நானும் உதயநிதியுடன் அந்த வேனில் பயணம் செய்திருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்புவரை உதயநிதி அரசியல் ஆசை இன்றி இருந்தார், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியவர்களில் நானும் ஒருவன். தற்போது உருவாகி வரும் நடிகர் சங்க கட்டிடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரும், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். கூடிய விரையில் அது நடக்க இருக்கிறது.
இவ்வாறு விஷால் பேசினார்.