டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

2020ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் சூரரைப்போற்று படம் 5 விருதுகளையும், வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் 3 விருதுகளையும், யோகிபாபுவின் மண்டேலா படம் 2 விருதுகளையும் ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா மட்டும் 10 தேசிய விருதுகளை வென்றது. இதற்காக திரையுலகினர் பலரும் சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்தி உள்ளார்.
இதுதொடர்பாக ரஜினி வெளியிட்ட பதிவில், ‛‛தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்'' என தெரிவித்துள்ளார்.
கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்'' என தெரிவித்துள்ளார்.




