''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். கமல், அர்ஜுன் நடித்த குருதிப்புனல், விக்ரம் நடித்த மீரா, வானம் வசப்படும் படங்களை இயக்கினார். இதில் வானம் வசப்படும் தோல்வியை சந்தித்தது. மற்றும் அந்த படத்தின் ஒளிப்பதிவும் விமர்சிக்கப்பட்டது. இதனால் அதன் பிறகு அவர் படம் இயக்கவில்லை.
இந்த நிலையில் இனி படம் இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஐதராபாத்தில் பேட்டியளித்துள்ள பி.சி.ஸ்ரீராம் இதுகுறித்து கூறியிருப்பதாவது: நானும் இயக்குனராகும் ஆசையில் சில படங்களை இயக்கினேன். ஆனால் நல்ல பலன் கிடைக்கவில்லை. ஒரு படத்தை இயக்குவது வேறு, ஒளிப்பதிவு செய்வது வேறு என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டேன். இயக்குனர் என்பவர் அனைத்து துறைகளையும் கையாள வேண்டும், அது என்னால் முடியவில்லை. அதனால் இனி படம் இயக்கப்போவதில்லை.
ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவும் சில நிபந்தனைகள் வைத்திருக்கிறேன். முழு கதையும் எனக்கு சொல்லப்பட வேண்டும், அந்த கதை எனக்கு பிடிக்க வேண்டும். எனது பணிக்கு முழு சுதந்திரம் வேண்டும். இதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பணி செய்வேன்.
இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.